லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஆவின் பால் தட்டுபாடு இல்லை

ஆவின் லாரிகள் வேலை நிறுத்தத்தால் சென்னையில் பால் தட்டுபாடு பாதிப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில், டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் இன்னும் போடப்படவில்லை. இதனைக் கண்டித்தும், ஆவின் பால் விநியோகத்தை முழுமையாக ஒரே நிறுவனத்துக்கு வழங்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மாநிலம் முழுவதும் ஆவில் பால் விநியோகம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆவின் பால் நிறுவன அதிகாரிகள், சென்னைக்கு ஆவின் பால் விநியோகம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளனர். டேங்கர் லாரிகள் மூலம் 14 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு வந்துள்ளதாகவும், நாளை மதியம் வரை தேவையான பால் இருப்பு உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

What do you think?

“சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது” – திமுக வெளிநடப்பு

“ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் இளைஞர்கள், விரைவில் நாடு திரும்புவர்” – வைகோ நம்பிக்கை