புகையும் மதுவும் கொரோனாவின் நண்பர்கள்! – உலக சுகாதார அமைப்பு

கொரோனா தாக்காமல் இருக்க மது அருந்துவதையும் புகைப்பிடிப்தையும் குறைத்துக் கொள்ளுமாறு மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், உலகமே இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வரும் நிலையில், சீனாவின் வுகான் மாகாணத்தில் நேற்று கொரோனாவுக்கு புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என கிடைத்துள்ள தகவல் ஆறுதல் அளிப்பதாக தெரிவித்தார்.

சுகாதார வசதிகள் குறைவாக உள்ள நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு கிடைக்க உலக சுகாதார அமைப்பு பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சமூக ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும் டெட்ரோஸ் வலியுறுத்தினார்.

முக்கியமாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களை உட்கொள்வது ஆகியவைகளை குறைத்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

What do you think?

பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு உத்தரவிற்கு ரஜினிகாந்த் ஆதரவு

‘Work From Home’ ஒரு மாத காலத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கும் BSNL!