பிரச்சனை தொகுதியாக மாறிய வடசென்னை..!! பால்கனகராஜுக்கு எதிராக திரும்பிய மக்கள்..!
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று வடசென்னை தொகுதிக்கு சென்ற பாஜக வேட்பளார் பால் கனகராஜ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக கருமாரியம்மன் கோவிலிலுக்கு சென்ற பால் கனகராஜ் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
அதாவது வடசென்னை தொகுதிகளான கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உட்பட்ட பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
அப்பொழுது தமிழக அரசையும், அவர்கள் செய்த திட்டங்களை கொச்சை படுத்தியும் விமர்சனம் செய்துள்ளார். மேலும் 1000 ஆயிரம் ரூபாய் பெண்கள் வாங்குவது வேறொன்றுக்கு சமம் என குஷ்பூ சொன்னது சரி என்றும் பேசியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் முகம் சுளிதுள்ளனர். இதனை உணர்ந்த பால் கனகராஜ் உரையாற்றிய கொண்டே திடீரென கோபப்பட்டு தொண்டர்களை திட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது…
அதன் பின் பிரச்சார வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பெண்கள் ஆவேசமடைந்து அவரை திட்டியுள்ளனர். இதனால் பிரச்சார களம் பிரச்சனை களமாக மாறியது.
அப்போது பெண்கள் திட்ட தொடங்கியதும் பெண்கள் என்று கூட பாராமல் பாஜக தொண்டர்கள் மக்களிடம் வீண் வாக்குவாதத்திலும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். எனவே பால்கனகராஜுக்கு எதிராக மக்களின் எதிர்ப்புகள் திரும்பியுள்ளது. இதனை வீடியோவாக பதிவிட்ட சில நெட்டிசைன்கள் “டேய் நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ஓட்டு விழுகாது” என பதிவிட்டு வருகின்றனர்.