வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றப்படும்..!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..!!
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, சொன்னதை செய்யக்கூடிய ஆட்சி, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி தான் திமுக, தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதி திட்டங்களை 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றியுள்ளோம், நிறைவேற்றப்படாத திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பாக புதுமைப்பெண் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படவில்லை. தமிழ் புதல்வன் திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என சென்னை புளியந்தோப்பில் புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் பேசிய அவர், மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்காக 6,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 29 மாவட்டங்களில் 49 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றபட்டுள்ள நிலையில் மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..