‘மூன்றாம் உலகப்போரா?’ திடீரென 3 ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா!

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் 3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா சபையின் எச்சரிக்கையையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டது. இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதித்தது.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோருடன் 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.

இந்நிலையில் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹாம்யோங் மாகாணத்தின் சோன்டாக் பகுதியிலிருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் போன வாரம் சிறிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளையும் வடகொரியா சோதனை நடத்தியதாகவும் இந்த நிலைமையை தென்கொரியா ராணுவம் உற்று கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில் தற்போது வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை மூன்றாம் உலகக்போருக்கான ஒத்திகையா என்ற கேள்வியும் பலரிடமும் எழுந்துள்ளது.

What do you think?

கொரோனாவால் எகிப்து கப்பலில் சிக்கியுள்ள 17 தமிழர்கள்!

‘விஜய் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அஜித்’ வைரலாகும் புகைப்படங்கள்!