ஏ.டி.எம் மெஷினில் பணம் திருட்டிய வடமாநில சிறுவன்..கையும்களவுமாக பிடித்த நபர்…
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 60 அடி சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது. மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் அந்த ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க சென்றுள்ளனர்.
அப்போது பணம் வராமல் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக மட்டும் குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வங்கியில் புகார் அளித்துள்ளனர்.
அப்பொழுது வடமாநில சிறுவன் ஒருவர் ஏ.டி.எம் மெஷினை போலி சாவியால் திறந்து பணத்தை எடுத்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த நபர் சந்தேகமடைந்து அச்சிருவனை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரோந்து பணியில் இருந்த காவலர்களிடன் சிறுவனை ஒப்படைத்தனர், அச்சிருவனை கைதே செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுவன், ஏ.டி.எம்., மெஷினில் பணம் வெளியே வரும் பகுதியில் அட்டை வைத்து அடைத்துள்ளான்.
இதனால் பொதுமக்கள் எடுக்க வேண்டிய பணம் ஏ.டி.எம் மெஷினில் உள்ளேயே இருந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வந்து சென்ற பின் சாவியால் ஏ.டி.எம்.
மெஷினை திறந்து பொதுமக்களின் பணத்தை திருடியது விசாரணை போது தெரியவந்ததுள்ளது. மேலும் சிருவனிடம் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், 10 ஏ.டி.எம் கார்டு மற்றும் இரண்டு சாவிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
-பவானி கார்த்திக்