நடிகர் கமல் ஹாசனும், ஸ்ரீ வித்யாவும் பல படங்களில் இணைந்து நடித்தனர். ஸ்ரீவித்யா, கமல் ஹாசன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால், இருவருக்கும் அதுதான் திரை வாழ்வின் ஆரம்பம். அதனால், ‘காதலால் தொழில்துறை கெட்டுவிடும்’ என இருவர் காதலையும் ஸ்ரீவித்யாவின் தாய் எதிர்த்தார். இதனால், கோபப்பட்ட நடிகர் கமல் ஹாசன், ஶ்ரீ வித்யாவுடனான காதலை முறித்துக் கொண்டார். அதற்குப் பிறகு சுமார் 10 வருடங்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.பின்னர், நடிகர் கமல் ஹாசன் வாணியை திருமணமும் செய்துகொண்டார்.
காதல் தோல்விக்குப் பிறகு ஸ்ரீ வித்யாவின் கவனம் மலையாள திரையுலகத்தில் கவனம் செலுத்தினார். தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் படங்களில் மாறி மாறி நடித்து பரபரப்பாக இயங்கி வந்தார்.ஆனால், அவர் மனதில் கணவன், குழந்தை, உறவுகள் என குடும்பமாக வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தது. 1978ம் ஆண்டு மலையாள இயக்குநர் ஜார்ஜ் தாமஸை கிறிஸ்தவ மதத்துக்கு மாறி திருமணம் செய்தார். பணத்துக்காகதான் ஜார்ஜ் தாமஸ் அவரை திருமணம் செய்துகொண்டதும், போலி கையெழுத்திட்டு, ஸ்ரீவித்யாவின் சொத்துகளை அபகரித்து பயன்படுத்திக் கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து, 1980ம் ஆண்டு அவரிடத்தில் இருந்து ஸ்ரீவித்யா விவாகரத்து பெற்றார். பின்னர், குணச்சித்திர வேடங்களில் நடிகை ஸ்ரீவித்யா நடித்து வந்ததார்.
ஆனால், புற்று நோய் அவரை தாக்கியதும் உருகுலைந்து போனார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரை நடிகர் கமல்ஹாசன் சென்று பார்த்து வந்தார். தொடர்ந்து, 2006ம் ஆண்டு ஸ்ரீவித்யா இறநதும் போனார். ஸ்ரீவித்யா தனது கடைசிக் காலக்கட்டத்தில் நடிகரும் கேரள அரசியல்வாதியுமான கே.பி. கணேஷ்குமார் ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கணேஷ்குமார் கூறுகையில், ஸ்ரீவித்யாவிடத்தில் இருந்து குண்டூசி கூட நான் எடுத்துக் கொள்ளவில்லை. அவரது சொத்துக்கள் வரி பாக்கிக்காக சில எடுத்துக் கொள்ளப்பட்டன. சில சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவற்றை விடுவிக்க நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.