“உனக்குள் நான் அல்ல.. எனக்குள் நீ அல்ல..” இதில் உங்கள் காதல்..!
நம்ம எல்லாருக்கும் காதல் என்ற உணர்வு வரும் அது சிலருக்கு பள்ளிப்பருவத்தில் வரும் சிலருக்கு கல்லூரி படிக்கும்பொழுது வரும்.
வேலைசெய்யும் அலுவலகத்தில் வரும், இன்னும் எத்தனையோ விதங்களில் வரும், ஆனால் பள்ளிப்பருவத்தில் வரும் காதல் மிகவும் அழகானது, இப்போல்லாம் யாரும் உண்மையாக காதலிப்பவர்கள் இருக்கிறாள் என்று சொன்னால் அது உண்மையாகாது.
இப்போல்லாம் வர காதல் வெறும் பணத்திற்காவோ அழகிற்காவோ, இன்னும் சொல்லபோனால் காமத்திற்காக பழகிவிட்டு சென்றுவிடுகின்றனர். அறியா வயதில் வரும் காதல், உண்மையான அன்பாக மட்டும் தான் இருக்கும்.
சாதி மதம் பாராமல், ஏற்ற தாழ்வு பாராமல், ஒரு அழகான காதல் நிகழ்வாக இருக்கும் அதில் சிலர் கடைசி வரைக்கும் கொண்டு சென்று திருமணம் செய்வார்கள், சிலருக்கு சூழ்நிலை காரணங்களினால் பிரிந்து விடுவார்கள், ஒருவரின் வாழ்க்கையில் மறக்கமுடியாத சில விஷியன்கள் இருக்கும். அந்த இடத்தில கண்டிப்பாக உங்க முதல் காதல் இருக்கும்.
என் மனதில் இருந்து ஒவ்வென்றாய் திருடுகிறாய் அதிலும் கள்ளத்தனமாக யாருக்கும் தெரியாமல் திருடி செல்கிறாய் முதலில் என் கண்களை, இரண்டாவது இதயத்தை, மூன்றாவது முத்தத்தை இந்த பாடலை கேட்கும் பொழுது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது, நம் இருவரும் கண்ணோடு கண் பார்க்கும் தூரத்தில் இருந்து கொண்டு காதல் செய்யலாம். இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடகர்கள் பவ்யா பண்டிட் மற்றும் கார்த்திக் பாடிய பாடல் இது
முதலில்
என் கண்களை
இரண்டாவது இதயத்தை
இதயத்தை
மூன்றாவது முத்தத்தை………..
என்னதான் சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படங்களின் பாடல்கள் இப்பொழுது பிரபலமாகிறது அல்லவா அதுபோல தான். இந்த பாடலும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் இருவரும் பார்த்து கொள்ளாமல் காதலிப்பது போன்ற சீன்கள் இருந்தாலும் அடிதடி இல்லாத காதல்படமாக இருக்கும், உனக்குள் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
என்பதனை வியந்து பார்க்கிறேன் ஏன் அழகியே, அட கிறுக்க உனக்கு நான் அல்ல எனக்கு நீ என்று உணர்கிறேன் உன் நிழலாக தொடர்கிறேன் இசையமைப்பாளர் சதிஷ் சக்ரவர்த்தி, இசையில் பாடகர்கள் சதிஷ் சக்ரவர்த்தி,ஸ்ரேயா கோஷல் சேர்ந்து பாடிய பாடல்.
ஒரு கிளி ஒரு
கிளி சிறு கிளி உன்னை
தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி
சிறு துளி வழிகிறதே
விழி வழி…….
உன்னுடைய பார்வை ஒன்றே போதும் அந்த வனத்தில் மேல் நிலவு கூட தேவை இல்லை, என் கண்கள் முழுவதிலும் நீ வந்த கனவு விடிந்தாலும் முடியாதடி, காதல் என்பது பொல்லாத தீ தான் மார்க்க நினைத்தாலும் நெஞ்சொடு நீ தான் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் அவரே பாடிய பாடல் இது.
காதல் என்பது
பொல்லாத தீ தான் மறக்க
நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்….
இந்த மாதிரி உங்க வாழ்க்கையில் எந்த காதல் செய்திங்க..?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..