நள்ளிரவில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு..! தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
டிஎன்பிஎஸ்சி (TNPSC ) யின் குரூப் தேர்வு எழுதவுள்ள தேர்வாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை தேர்வு ஆணையம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் நடைபெறுகிறது. அதற்கான இறுதி வாய்ப்புகளை மீண்டும் ஆவணங்களை அப்லோட் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. ஆனால் அதற்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை அப்லோட் செய்யாதவர்களுக்கு இறுதி வாய்ப்பை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது. அதற்கு சான்றிதழ் பதிவேற்ற உத்தரவிடப் பட்டிருந்த நிலையில் பலர் சரியாக பதிவேற்றம் செய்யவில்லை என்பதால் தற்போது கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருகிற 15ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்காகத்தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
அதில் தேர்வில் கலாதமாதமாக வந்தவர்கள் மற்றும் சான்றிதழ்கள் சரியாக பதிவேற்றம் செய்யாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்வு ஆணையம் நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..