“இனி மருத்துவ துறையிலும் ஏஐ..” அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த அப்டேட்..!!
இனி மருத்துவதுறையிலும் AI தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு குறித்த தொகுப்பு புத்தகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்..
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்..,
“மருத்துவ ஆராய்ச்சி என்பது மருத்துவ முன்னேற்றத்திற்கான முதல் அடிப்படை விஷயம்.. ஒரு மருந்தை ஆராய்ச்சி செய்வதன் மூலம் நமது சமுதாயத்தின் நலம் மற்றும் ஆரோக்கியத்தை தொடர்ந்து காக்க முடியும். இந்த மருத்துவ ஆராய்ச்சிகளை வைத்து தான் பல நோய்களுக்கான் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு., புதுமைகளை நோக்கிய மருத்துவ அறிவியலின் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒவ்வொரு தலைப்பில் புதிய மருந்துகள் அல்லது., நோய்களை குணப்படுதுவதற்கான வழிகள் அல்லது இயந்திர கருவிகள் கண்டு பிடிக்கப்படும்.. அந்த வகையில் இந்த ஆண்டின் மருத்துவ ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில், கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்றைக்கு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் மருத்துவத்துறைக்கு மிக முக்கியமான ஒன்று “செயற்கை நுண்ணறிவு” உலகளவில் மருத்துவத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் உடல் நலனை காப்பாற்றுவதில் நம்முடைய பங்கு அதிகமாக இருக்க வேண்டும்
மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரையில்
சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியக்கூறுகளை செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது. நோய்களை கண்டறிதல் முதல் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள், ரோபோட்டி அறுவை சிகிச்சைகள் வரை ஏற்கனவே பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய உலகில் இந்த ஆராய்ச்சி போட்டிகள் மிகவும் முக்கியமானவை ஆகும். எதிர்காலத்தை நோக்கி பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவு, மருத்துவர்களுக்கு பதிலாக செயல்படாது. ஆனால் இது திறமைகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
மேலும் ஏஐ விரைவாக துல்லியமாக மற்றும் திறமையான சுகாதாரத்தை வழங்க நமக்கு உதவும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகத் தரத்திலான மருத்துவ சேவைகளை பெறுவதை உறுதிப்படுத்த குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள சுகாதார சேவைகள் மேம்படுத்த ஏஐ பெரிதும் உதவும் என நம்புகிறேன்’ என இவ்வாறே அவர் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..