இனி உங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு இதையும் சொல்லி கொடுங்க..!
கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சில விஷயங்கள பெண் பிள்ளைகளுக்கு கத்துக்கொடுக்க வேண்டியது அவசியம் ஆயிற்று.
தினமும் வீட்ட கூட்டு..,
பாத்திரத்த சுத்தமா கழுவி பழகு..,
உன் துணிய நீயே துவைச்சுக்கோ..,
வாரம் ஒரு தடவை பாத்ரூம் கழுவு..,
சமையல் கத்துக்கோ..,
வயசானவங்க முன்னாடி கால் மேல கால் போட்டு ஒக்காராத..,
வீட்டுல ஆண்கள் யார் இருந்தாலும் துப்பட்டா போடு. (அப்பா, அண்ணனா இருந்தாலும்)
அவங்க வேலைகளை அவங்களே செய்யும்போது அவங்கள பாராட்டுரது ரொம்ப முக்கியம்..
குறிப்பா சொல்லனும்னா “அம்மா சமையலவிட உன் சமையல் சூப்பர்டா” ன்னு சொல்ற அப்பாவின் பாராட்டுதான் பொண்ணுங்களுக்கு கோல்டு மெடல் வாங்குன மாதிரி.
இப்படி கசப்பு மருந்து குடுத்து வளர்க்கப்படற பொண்ணுங்க தான் வாழ போகும் இடத்துல அழகா குடும்பத்தை சமாளிச்சு வேரூன்ற ஆரம்பிச்சுரும்.
ஆனா இது மாதிரி எதையும் கத்துக்குடுக்காம செல்லம் குடுத்து வளர்கிற பொண்ணுங்களுக்கு போற இடத்துல சமையல் செய்ய ஒரு சின்ன வேலை சொன்னா கூட கோவம் தான் வரும்.
அதுவும் அவங்க மாமியார் மாமனாருக்கு செய்ய சொன்னா போதும்.., கேக்கவே வேண்டாம்.. அப்புறம் கண்ண கசக்கிட்டு வந்து அம்மா வீட்ல நிக்கும்.
நம்மாளுகளும் கொஞ்சம் ஏத்திவிடுவாங்க. கடைசியில அது டைவர்ஸ்ல போய் நிக்கும். பெண் என்பவள் பிரபஞ்ச சக்தி.. அத ஆக்கசக்தியா ஆக்கறதும், அழிவுசக்தியா மாத்தறதும் பெத்தவங்கிட்டதான் இருக்கு..
பெத்தவுகளுக்கு பெண் பிள்ளை என்றால் தனி பாசம் தான். அவுங்க வைக்கிற பாசம் பெண் பிள்ளையும் பெத்தவுங்க மேல வைப்பாங்க..,
அதேபோல் புகுந்த வீட்டுக்கு போயிட்ட அங்க இருக்கிற மாமியார் மாமனார் மேலையும் பாசம் வைத்து அப்பா அம்மா போல் நினைத்து செயல் பட்டாள் எந்த ஒரு பிரச்னையும் வராது.. குடும்பமும் சந்தோசம் நிறைந்து காணப் படும்..
– வீர பெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..