விஜய்சேதுபதிக்கு பிடித்த சிக்கன் பகோடா…!
நம் வீட்டில் சிக்கன் பகோடா செய்திருப்போம் வழக்கமாக செய்கிற மாறி ஆனால் இப்போ இது விஜய்சேதுபதியே சொன்ன அவருக்கு மிகவும் பிடித்தமான முறையில் சிக்கன் பகோடா எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா..
சிக்கன்
கொத்தமல்லி
புதினா
இஞ்சி
பூண்டு
சீரகம்
பச்சை மிளகாய்
உப்பு
அரிசி மாவு
தயிர்
சோள மாவு
மஞ்சள் தூள்
கரம் மசாலா
எலுமிச்சை சாறு
முதலி சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு மிக்ஸியில் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் உப்பு, கரம் மசாலா, அரிசி மாவு, சோள மாவு மற்றும் தயிர் கலந்து அதில் சிக்கனை போட்டு அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும்
பின் அதில் எலுமிச்சை சாறு கலந்து 30 நிமிடத்திற்கு ஊறவிட வேண்டும்.
அரை மணி நேரத்திற்கு பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது விஜய் சேதுபதிக்கு பிடித்த சுவையான சிக்கன் பகோடா தயார்.
