இனி மதுவை வீட்டில் வைத்து குடிக்கலாம்..!! மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் சேர்ந்து செயல்படும் பார்களில் கழிப்பறை வசதிகள் சுத்தமாக இல்லாமல் இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் சீர் செய்யாமல் இருப்பதாக கூறியுள்ளார்..
மேலும் பாரில் விற்கப்படும் அசைவ உணவுப் பொருட்கள்., காலாவதியாகி இருப்பதாகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், தண்ணீர் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மட்டுமல்லாமல்., தூய்மையற்ற தண்ணீரை விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.., எனவே அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற கோரிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவித்தால், மதுப்பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனவே, இனி பாரில் வைத்து மது அருந்துவது பிரச்சனை என்றால் மனுதாரர் தேவைப்பட்டால் மதுவை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து அருந்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..