இனி நீங்களும் புகைப்பழக்கத்திற்கு குட் பாய் சொல்லலாம்..!! இப்படி பண்ணா..?
தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமல்ல சில பெண்களுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதில் இருந்து வெளிவருவது மிகவும் சவாலான ஒன்று. அந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக சில டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
* முதலில் இந்த தேதிக்குள் புகைப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று உறுதியுடன் இருங்கள்.. அதை மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்ளுங்கள்..
* சிலருக்கு டீ, காபி குடித்து முடித்ததும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும். அந்த நேரத்தில் சிகரெட்டிற்கு பதிலாக வேறு எதாவது வாங்கி சாப்பிடுங்கள்.
* எந்த எந்த நேரத்தில் நீங்கள் புகைபிடிக்கிறீர்கள் என்பதை கவனித்துக் கொண்டு, மற்ற செயலில் கவனம் செலுத்துங்கள்.
* தினமும் காலை டீ, காபிக்கு பதிலாக பால் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
* பால் குடித்து முடித்தவுடன் தினமும் ஒரு 20 நிமிடம் வாக்கிங் செய்யுங்கள்.
* வாக்கிங் முடித்தவுடன் உடற்பயிற்சி அல்லது யோக செய்யுங்கள், இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும், மேலும் மன அமைதியை ஏற்படுத்தும். இதனால் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மறக்க துவங்கும்.
* சிலருக்கு வேலை மீது இருக்கும் டென்ஷன் காரணமாக புகைபிடிக்க தோன்றும், அந்த சமயத்தில் சிகரெட் புடிப்பதை விட, தனிமையை உணருங்கள். அதாவது ஒரு ஹெட்செட் போட்டுக்கொண்டு இனிமையான பாடல்களை கேட்க துவங்குங்கள்.
* இனிமையான பாடல் கேட்க துவங்கியதும் உங்கள் முகம் புன்னகைக்க துவங்கும்.., அடுத்து சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதும் நினைக்கச் செய்யாது.
* முடிந்தவரை காலையில் சூரியநமஸ்காரம் செய்ய தொடங்குங்கள்..
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..