800 பெண்களின் ஆபாச புகைப்படங்கள்.. அதிர வைத்த நபர்.. திணறி போன போலீஸ்..!
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான் சாகிப். 32 வயதாகும் இவர் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், குண்டூரில் போதைப் பொருட்களை கடத்தியது தொடர்பான வழக்கில், இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அப்போது, அவரிடம் இருந்த செல்போன்கள், காவல்துறையினர் மூலம், பறிமுதல் செய்யப்பட்டது. அந்த செல்போனை ஆய்வு செய்ததில், 800-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின், ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அதாவது, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை, கல்லூரி மாணவிகளுக்கு மஸ்தான் சாகிப் விற்பனை செய்வது வழக்கம். அவ்வாறு விற்பனை செய்யும்போது, சில பெண்களை போதைக்கு அடிமையாக்கியுள்ளார். பின்னர், அந்த பெண்களை தனது வலையில் வீழ்த்தி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், அவர்களை நிர்வாணமாகவும் படம் எடுத்துள்ளார். வசதி வாய்ந்த சில பெண்களை, பணம் கேட்டும் அவர் மிரட்டி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல், காவல்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-பவானி கார்த்திக்