ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஷனரியான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் வாழ்வில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை செலவழித்த ஒடிசாவிலுள்ள தொழுநோய் இல்லத்தில்தான் 1999ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி தனது கடைசி மதிய உணவை உண்டார். அன்றைய தினம் இரவில் ன்டுஜ்ஹர் மாவட்டத்தில் மனோகர்பூர் கிராமத்தில், கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் பிலிப் (வயது 10), திமோதி (வயது 8) ஆகியோரை கலகக்கார கும்பல் ஒன்று ஸ்டெயின்ஸின் ஜீப்பில் வைத்து எரித்துக் கொன்றுவிட்டது. Odisha govt frees convict
தொழுநோயாளிகளுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு, ஏழை ஆதிவாசிகளை கிரஹாம் ஸ்டெயின்ஸ் மதமாற்றம் செய்கிறார் என்று அந்த கும்பல் நம்பியதே இந்த கொலைக்கு காரணமாக அமைந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மகேந்திர ஹெம்ராம் என்பருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. Odisha govt frees convict
ஒடிசா தலைநகர் புவனேசுவரில் இருந்து 200 கி.மீ தொலைவிலுள்ள கியோன்ஜிகர் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நன்னடத்தை காரணமாக ஏப்ரல் 16ம் தேதி அவரை ஒடிசா அரசு விடுவித்துள்ளது. சிறையில் இருந்து வெளி வந்த அவருக்கு மாலை அணிவித்து அவரின் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, ஜெய் ஸ்ரீராம் கோஷமும் எழுந்தது.
ஒடிசா மாநிலம் சிறைக்கைதிகள் மறு ஆய்வுக்குழு பரிந்துரையை ஏற்று மகேந்திரா ஹெம்ராம் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்தியா மட்டுமல்லாமல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 25 ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளார். பாதிரியாரை எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த போது, அவருக்கு வயது 25 என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மகேந்திரா ஹேம்ராமின் விடுதலை செய்யப்பட்டதை பலரும் விமர்சித்துள்ளனர். சிறை கைதிகள் திருந்த வாய்ப்பளிப்பது நல்ல விஷயம்தான். அதே வேளையில், செய்த குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் விடுதலை அமைந்திருக்க வேண்டும். அப்பாவிகளை கொடூரமாக எரித்துக் கொன்றவருக்கு கருணைக் காட்டுவது நியாயமே இல்லாததது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.