ஒடிசா ரயில் விபத்தில் கணவன் இழந்ததாக கூறி நிவாரணநிதி கேட்டு நாடகமாடிய பெண்..!! சிக்கியது எப்படி..?
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தில் இரண்டு விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்ட சம்பவம், அனைவரின் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் இதுவரை 288 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், 800 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது.
இந்த இரயில் விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை இரயில்வே நிறுவனமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், பிரதமர் மோடி 5 லட்சம் ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிவாரண நிதி தருகிறார்கள் என்று அறிவித்ததும். ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தின் மனியபாந்தா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண் இந்த பணத்தை வாங்க வேண்டும் என்ற அல்ப ஆசையில், 13 ஆண்டுகளாக பிரிந்து வாழும் கணவர் பிஜாய் இறந்து விட்டதாக கூறி போலி சான்றிதழ் காண்பித்துள்ளார்.
நிவாரண நிதி கேட்டு, பல அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். சான்றிதழ்கள் காண்பிக்க சொல்லி கேட்டுள்ளனர். சான்றிதழை பரிசோதித்த பின் தான் தெரிந்தது அது போலி என்று தெரியவந்தது.
இவை போலி என்பதை அறிந்த அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துவிட்டு கீதாஞ்லியையும் வரவழைத்துள்ளனர். போலி சான்றிதழ் சமர்ப்பித்த குற்றத்திற்காக போலீசார் கீதாவை வார்னிங் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
பின் பிஜாய்க்கும் இது பற்றி தகவல் கொடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பிஜாய், கணவர் இழந்ததாக கூறியதற்கும், போலி சான்றிதழ் காட்டி நிவாரண நிதி கேட்டதன் பெயரில் கீதா மீது புகார் அளித்துள்ளார். போலீசிற்கு பயந்த கீதா தற்போது தலைமறை வாகியுள்ளார்.
போலி சான்றிதழ் காண்பித்து வேறு யாராவது.., இதை போல் வந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. மேலும் கீதாவையும் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற பல முக்கிய நிகழ்வுகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..