கையும் களவுமாக சிக்கிய அதிகாரி..!! கொடைக்கானல் சிக்கிய பணம்..!! லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி..!!
கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை சோதனை முடிவில் இரண்டு லட்சத்தி நான்காயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கை காட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்திருக்கிறது.. இந்த கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்திலிருந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் கடன், கால் நடைகடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் கொடுக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது..
இந்நிலையில் மன்னவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இருந்து வருகிறார்கள்.. பெரும்பாலான விவசாயிகள் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்…
இந்நிலையில் நேற்று இரவு திண்டுக்கல் லஞ்சஒழிப்பு டிஎஸ்பிநாகராஜன் தலைமையில் லஞ்சஒழிப்பு இன்ஸ்பெக்டர் பழனிசாமி உள்ளிட்ட லஞ்சஒழிப்புதுறையினர் நேற்று மாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக திடீரென்று சோதனையிட்டனர்..
அப்போது அலுவலகத்தில் இருந்த அலுவலர்களை வெளியேற்றாமல் பூட்டி சோதனை நடைபெற்றது.. சோதனையின் முடிவில் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத சுமார் 2 லட்சத்து நான்காயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது… அந்த பணம் எவ்வாறு அலுவலகத்திற்கு வந்தது, யாருக்கு கொடுக்க வைத்திருந்தார்கள்.. என்பது குறித்து லஞ்சஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்..
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் பேசுகையில் மன்னவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் குறித்து இரண்டு முறைக்கு மேல் புகார் வந்தது…
இதன் அடிப்படையில் ரகசிய தகவல் கிடைத்தது அப்போது இங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அங்குள்ள அலுவலர்கள் மற்றும் இந்த பணம் எங்கிருந்து வந்தது அல்லது யாரிடம் கொடுக்க இங்கே வைத்திருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..