ஓக்கேனக்கல் செல்ல தடை..!!
கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாகச் சரிந்துள்ளது.
நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலும் குறைந்துள்ளது.
மேலும், கா்நாடக அணைகளில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாகச் சரிந்தது.
நீா்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவாபாணி உள்ளிட்ட அருவிகளின் நீா்வரத்து சரிந்தும் காணப்படுகிறது.
காவிரி ஆற்றின் நீா்வரத்து அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்
அதேபோல், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 புள்ளி16 அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 285 கன அடியிலிருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 227 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..