‘சர்ச்சில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்ட முதியவர்’ சென்னை அருகே பரபரப்பு !

சென்னை அடுத்த ஆவடியில் முதியவர் ஒருவர் சர்ச்சில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஈனேஷ். 62 வயதான இவர் மத்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் கிறிஸ்தவரான இவர் அங்குள்ள சர்ச்சில் இரவு நேரத்தில் லைட் போட சென்றுள்ளார். ஆனால் அதன்பின்பு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் தேவாலயம் சென்று பார்த்துள்ளனர். அப்போது சர்ச்சில் ஈனேஷ் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சர்ச்சில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அந்த சர்ச்சிற்கு அடிக்கடி வரும் மோசஸ் என்பவர் தான் ஈனேஷை கத்தியால் மூன்றுமுறை நெஞ்சில் குத்தி கொலை செய்தது சிசிடிவி வீடியோவில் தெரிய வந்தது.

கொலை செய்த மோசஸை தாம்பரம் அருகில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவன் மீது ஏற்கெனவே சத்தியவேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், பட்டாபிராம்
காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

‘123 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்’ 4,627 பேர் பலி!

‘தேசிய ஊடகங்களுக்கு அழைப்பு’ இன்று வெளியாகிறதா ரஜினியின் கட்சி அறிவிப்பு?