எந்த நாளில் கருட பகவானின் வழிபட்டால் நாக தோஷம் நீங்கும்..!! பிரச்சனைகள் தீரும்..!!
கருட பகவானுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு உண்டு என பல புராணகதைகள் உள்ளது. இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமாலின் வாகனமாக இருப்பவர் “கருடன்”. பறவைகளின் அரசானாக இருபவரும் “கருடன்”, அவர் மங்கள வடிவமாக திகழ்கிறார்.
அமிர்தத்தை தேவ லோகத்தில் இருந்து வந்த பெருமை இவரை மட்டுமே சேரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினமும் வணங்கினால்
- நாக தோஷங்கள் நீங்கும்,
- தோல் வியாதிகள் குணமாகும்,
- திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்,
- குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்கும்,
- தீராத நோய்களும் தீர்ந்து விடும்.
பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் கூறியிருப்பார்கள். கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடக்கும் பொழுது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடையும் என்று சொல்லுவார்கள்.
எந்த நாளில் வழிபட்டால் பலன் கிடைக்கும் :-
- ஞாயிறு : நோய் நீங்கும்.
- திங்கள் : குடும்பம் செழிக்கும்.
- செவ்வாய் : உடல் பலம் கூடும்.
- புதன் : எதிரிகளின் தொல்லை நீங்கும்.
- வியாழன் : நீண்ட ஆயுளை பெறலாம்.
- வெள்ளி : லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
- சனி : மோட்சம் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் மற்றும் குறிப்புகள் பரிகாரங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..