” விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மனு “
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில் பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை அரசு வழங்க வேண்டும், மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், பூசாரிகள் ஓய்வூதியம் மற்றும் நலவாரிய அட்டை பெற வருவாய் சான்று அவசியம் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.