டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது…
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 14-ஆம் தேதி 6-வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.
அதனையும் கெஜ்ரிவால் புறக்கணித்த நிலையில், தற்போது 7 ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அந்த சம்மனில் வரும் 26 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
