மீன் பகோடா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
மீன் 225 கிராம் முள் இல்லாதது
மிளகுத்தூள் 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
உப்பு தேவையானது
இஞ்சி 1
பூண்டு 1 ஸ்பூன் நறுக்கியது
எலுமிச்சை சாறு 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 3/4 ஸ்பூன்
புதினா 2 ஸ்பூன்
கடலை மாவு 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 2 1/2 ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
செய்முறை:
மீனை ஒரு முள் கூட இல்லாதவாறு சுத்தம் செய்து பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மீன் சேர்த்து பின் உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் ஊறவைத்த பின் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலா, புதினா, கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் ஊறவைத்த மீன் பகோடாவை சேர்த்து மிதமான தீயில் வேகவைக்க வேண்டும்.
வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு பொன்னிறமாக வேகவைத்து தனியே எடுக்கவும்.
அவ்வளவுதான் டேஸ்டியான மீன் பகோடா தயார். சூப்பரான டேஸ்டில் மீன் பகோடா ரெடி.