ஹெல்தியான கடலைமிட்டாய் ஸ்நாக்…!
வேர்க்கடலை – 2 கப்
வெல்லம் – 2 கப்
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1 ஸ்பூன்
நெய் – 4 தேக்கரண்டி
ஒரு வாணலை அடிப்பில் வைத்து வேர்க்கடலையை போட்டு வறுத்து பின் ஆற விடவும்.
தட்டில் நெய் தடவி ரெடியாக வைக்கவும்.
வெல்லத்தை பாகு காய்ச்சி வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும். பாகில் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
பின் பாகில் வேர்க்கடலையை கலந்து தட்டில் ஊற்றி ஆற விடவும்.
ஆறியதும் தட்டில் இருந்து எடுத்து சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அவ்ளோதான் கடலை மிட்டாய் தயார்.