ஓட்ஸ் காலை உணவு..!
தினமும் இட்லி, தோசை, பொங்கல் என்று சாப்பிட்டு அலுத்துப்போச்சா? கவலை வேண்டாம், இதோ ஒரு புதிதான மற்றும் ஆரோக்கியமான காலை உணவு இதை ட்ரைப் பண்ணிப் பாருங்க இன்னிக்கு, சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் இதுமாறி ஓட்ஸில் ரெசிபிஸ் செய்து சாப்பிட உடல் எடையும் குறைவதை கண்கூட பார்க்கலாம். குழந்தைகளுக்கும் இது ரொம்ப பிடித்தமானதாக இருக்கும்.
வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
3/4 கப் முழு ஓட்ஸ்
1/2 கிளாஸ் பால்
1/2 கிளாஸ் தண்ணீர்
3 பாதாம் சிறிதாக முறித்தது
2 பிஸ்தா சிறிதாக முறித்தது
1 டேபிள் ஸ்பூன் பூசிணி விதைகள்
1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த திராட்சை
1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள்
1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் தேன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து சூடாக்க வேண்டும்.
நன்றாக சூடானதும் முக்கால் கப் ஓட்ஸ், பூசணி விதைகள், ஆளி விதைகள், உலர்ந்த திராட்சை, பாதாம், பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வெந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சாப்பிடும்போது ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடலாம்.