அசைவ சுவையில் சைவ ஈரல் குழம்பு..!
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு – 2 கப்
நறுக்கிய வெங்காயம் – 1 கப்
நறுக்கிய தக்காளி – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
மிளகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
பிரிஞ்சி இலை – 1
அன்னாசி பூ – 1
நல்லெண்ணெய் – 1/2 மேஜை கரண்டி
புதினா, மல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பச்சை பயிறை நன்றாக நீரில் கழுவி ஐந்து மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தலா ஒரு ஸ்பூன் அளவில் மிளகு மற்றும் சீரகம், ஒரு பச்சை மிளகாய், ஊறவைத்த பச்சை பயிறு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
இட்லி தட்டில் இந்த மாவினை ஊற்றி வேகவைத்துக் கொண்டு பின் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, அன்னாசி பூ ஆகியவற்றை சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் வேகவைத்த பச்சை பயிறு துண்டுகள் சேர்த்து கிளறவும்.
பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்.
அனைத்தும் நன்றாக கலந்ததும் அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேகவைக்க வேண்டும்.
பின் கொஞ்ச நேரம் கழித்து மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கிளற வேண்டும்.
கடைசியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் சைவ ஈரல் குழம்பு தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.