சத்தான ராகி மாவு சப்பாத்தி..!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு 1 கப்
எண்ணெய் தேவையானது
தண்ணீர் 3/4 கப்
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் ராகி மாவை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மாவில் கட்டிகள் எதுவும் உண்டாகாமல் இருக்கும்படி கிளறி விட்டு இறக்கி ஆறவிடவும்.
மாவு நன்றாக ஆறியவுடன் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
சப்பாத்தி கல்லில் சிறிது ராகி மாவு தூவி அதில் பிசைந்த மாவில் ஒரு உருண்டை வைத்து சப்பாத்தி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சப்பாத்தி போட்டு எண்ணெய் தடவி இருபுறமும் சுட்டு எடுக்க வேண்டும்.
இதனுடன் தேங்காய் சட்னி மற்றும் தக்காளி தொக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.