சுவையான எஃக் நூடல்ஸ் ரெசிபி..!
இரவில் தினமும் இட்லி தோசை என சாப்பிட்டு அளுத்துப்போய் இருந்தால் இன்னுக்கு இந்த முட்டை நூடல்ஸ் ட்ரைப் பண்ணுங்க.
தேவையான பொருட்கள்:
- ஒரு பாக்கெட் நூடுல்ஸ்
- எண்ணெய்
- உப்பு
- எண்ணெய்
- மூன்று முட்டை
- உப்பு
- மிளகுத்தூள்
- எண்ணெய்
- ஒரு துண்டு இஞ்சி
- மூன்று பல் பூண்டு
- ஒரு பெரிய வெங்காயம்
- ஒரு கேரட்
- கால் முட்டைக்கோஸ்
- ஒரு டேபிள் ஸ்பூன் சோயா சாஸ்
- ஒரு டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ்
- ஒரு குடைமிளகாய்
- ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர்
- ஒரு டேபிள் ஸ்பூன் டொமேட்டோ கெட்சப்
- வேக வைத்த நூடுல்ஸ்
- வறுத்தெடுத்த முட்டை
- உப்பு
- மிளகுத்தூள்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நூடல்ஸ், எண்ணெய் ஒரு ஸ்பூன், சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
- நூடல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடிக்கட்டி நூடல்ஸை ஆறவைக்க வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் முட்டை உடைத்து ஊற்றி அதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதே வாணலில் இன்னும் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, நீளமாக நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு சில்லி சாஸ், சோயா சாஸ், வினிகர், டொமேட்டோ கெட்சப் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்.
- கடைசியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறிவிட்டு, முன்பு வறுத்த முட்டையை சேர்த்து கலந்து இறக்கவும்.
- அவ்வளவுதான் சுட சுட முட்டை நூடல்ஸ் தயார்.