குழந்தை பிறந்த பின் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று..!!
திருமணம் ஆன பெண்கள் அனைவருக்கும் தாய்மை வரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குழந்தை பிறந்த பின் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
ஆனால் குழந்தை பிறந்த பின் குழந்தை பராமரிப்பு பற்றி பல கேள்விகள் இருக்கும். குழந்தை அழுதால் என்ன செய்வது, விக்கல் எடுக்கும் பொழுது எப்படி நிறுத்துவது என்று எல்லாம் இருக்கும்.
குழந்தை பராமரிப்பு பற்றி சில குறிப்புகள்..
குழந்தை பிறக்கும் பொழுது தாய்மார்கள், தங்களின் குழந்தை பற்றிய மருத்துவ குறிப்புகளை, உங்கள் மருத்துவரிடம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
* குழந்தை பிறந்ததும் குழந்தை அழ தொடங்கும் பொழுதே தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
* பிறந்த சில மணி நேரத்தில் அவர்கள் கண்களை திறகின்றார்கள் என பார்க்க வேண்டும். அந்த காலத்தில் குழந்தைகள் கண் திறக்க 15 நாட்கள் ஆகும் என சொல்லுவார்கள், ஆனால் தற்போதைய நடைமுறையில் அது சாத்தியமில்லை.
குழந்தை பிறந்ததும் அவர்கள் கண்களை திறகின்றார்களா என பார்க்க வேண்டும். இல்லையேல் அதிகாலை சூரியன் உதிக்கும் பொழுது, அதன் கதிர்கள் குழந்தை கண் மேல் படும் படி காட்ட வேண்டும்.
* குழந்தை பிறந்த பின் அவர்கள் அழும் சத்தம் கேட்க வேண்டும், சத்தம் வரவில்லை என்றால் கழுதைபால் கொடுக்கலாம்.
* முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று குழந்தையின் காதில் ஓசை எழுப்ப வேண்டும். கை விரல் சொடுக்குவது, அல்லது செல்ல பெயர் சொல்லி கொஞ்சுவது, இது குழந்தைக்கு காது சரியாக கேட்கிறதா என்று பார்பதற்கான அறிகுறி.
* குழந்தை பிறந்த பின் தாயிடம் மட்டுமே இருக்க வேண்டும் காரணம் தாயின் கருவறையில் இருந்த பொழுது அவர்களுக்கு அது இருட்டாக இருக்கும். பிறந்த பின் வெளிச்சத்தை பார்த்த பின் அதிக பயம் கொள்வார்கள்.
தாயின் அரவணைப்பு அவர்களுக்கு கிடைக்கும் பொழுது, எப்பொழுது அவர்கள் அதை பாதுகாப்பாக உணருவார்கள்.
மேலும் இது போன்ற பல குழந்தைகள் குறிப்பு பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி.