‘கொரோனா அறிகுறி’ மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட நபர்!

டெல்லியில் கொரோனா வைரஸ் அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த பஞ்சாப்பைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தனக்கு தலைவலி இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் அவரை டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மருத்துவமனையின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவமனை அதிகாரி, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறது. பரிசோதனைக்குத் தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் முழுமையான மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சில மணி நேரங்களிலேயே 7வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்” என்று அவர் தெரிவித்தார்.

What do you think?

‘கல்லூரி மாணவிக்கு சுயமாக பிரசவம் பார்த்த காதலன்’ குழந்தை பலி!

‘கொரோனாவுக்கு மருந்து’ பாபா ராம்தேவின் விளம்பரத்திற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு!