30 வயதை கடந்த பெண்கள் மாரடைப்பை தடுக்க சில டிப்ஸ்…
அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்திருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதம் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும்.
ஒரு வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
உங்களுடைய உடல் அதிக எடையுடன் இருந்தால் அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ளுங்கள். உங்களுடையை BMI 20க்கு கீழாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாரடைப்புக்கு புகைப்பிடிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் புகைப்பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல மது அருந்துவதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது, எனவே அதையும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
மனஅழுத்தம் என்பது மாரடைப்பை அதிகரிக்கக்கூடும். அத்தகைய மனஅழுத்தத்தை போக்க யோகா, தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சியால் மனஅழுத்தத்தை குறைக்கலாம்.
உடம்பில் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் வராமல் உடம்பை பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.