3 மணி நேரம் மட்டும் தான் இருக்கு..!! பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்..!!
திருச்சியில் இருந்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு, உடனுக்குடன் இதய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவ குழுவினர்களுக்கு பாராட்டு விழா
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை மருத்துவர் விஜய் சதாசிவம் கூறியதாவது.. திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது குழந்தை பிறந்த 7 நாட்களில், கண்டுபிடிக்க பட்டது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்க திருச்சி மருத்துவ குழுவினர், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
இதனை தொடர்த்து திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும், கோவை மாவட்ட காவல்துறையின் உதவியுடன் பசுமை வழித்தடம் மூலமாக சுமார் 3 மணி நேரத்தில் திருச்சியில் இருந்து குழந்தை கோவைக்கு வென்டிலேட்டர் உதவுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு வரப்பட்டு, குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பட்டது.
வெற்றிகரமாக நடைபெற்ற இந்த அறுவைச்சிகிச்சைக்கு பின் குழந்தை நல்ல நிலையில் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் குழந்தை வீடு திரும்பும் அளவிற்க்கு தயாராகி விட்டது. இந்த மகிழ்ச்சியை இன்று ராமகிருஷ்ணா மருத்துவ குழுவினர் கொண்டாடி வருகின்றதாக தெரிவித்தார்.
முன்னதாக இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு, எஸ்.என்.ஆர் அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ சுந்தர் மலர் கொத்து வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ குழுவினரான மேன்ப்பிரேட் பெர்னாண்டோ, நரேந்திரன் மேனன், மணிகண்டன், சித்தார்த் புத்தவரபு, தேவபிரசாத், சுஜா மரியம், மற்றும் குழந்தையின் பெற்றோர்கள், செவிலியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..