காதல் மட்டுமே மாயம் செய்யும்..!
மருத்துவமனைக்கு சென்று வந்தால் நோய் குணமாகும், நம்மிடம் இருந்து காசும் காரியாகும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மன நோயாளியாக சென்ற ஒருவருக்கு காதல் ஏற்பட்டு, வாழ்க்கையே மாற்றியுள்ளது. அவரை சந்தித்து அவரின் காதல் கதையை தெரிந்துக்கொண்டோம்.
அதற்கு அவர் சொன்ன பதில், காதல் மட்டுமே மாயம் செய்யும்..!
என் பெயர் மகேந்திரன் பி.காம், எம்.பில், பி.எச்.டி வரை படித்த பட்டதாரி, ஒரு சில மனஅழுத்தம் அதிகமானதால் சென்னையில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.
என் மனைவி பெயர் தீபா எம்.ஏ, பி.எட், பட்டதாரி. அவளுக்கு அப்பா மட்டும் தான் சில வருடங்களுக்கு முன்னால், அவள் அப்பா இறந்து போனதால் அனைத்தும் அவளை விட்டு பறிபோனது. அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இருவரும் சிகிச்சையில் இருந்தோம், நாளடைவில் நாங்கள் குணமாக எங்களை வீட்டிற்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள், ஆனால் எங்களை எங்கள் வீட்டார் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை இருவரும் தனிதனி காப்பகத்தில் சேர்ந்தோம்.
ஆறுமாதங்களுக்கு பின், சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனைக்கு இருவரும் ஒரே நாள் வந்த பொழுது, ஒருவரை ஒருவர் சந்தித்தோம்.
முதல் பார்வையிலேயே எனக்கு அவளை பிடித்துவிட்டது., எனவே அவளிடம் சென்று நிழல் போல நானும், நடைபோட நீயும் என பாடினேன், அவளுக்கு அர்த்தம் புரியவில்லை.
என்னை திருமணம் செய்துக்கொள்வாயா என கேட்டேன். அவளும் சிரிப்பில் அவள் சம்மதத்தை தெரிவித்தால். இருவருக்கும் உறவு என்று யாரும் கிடையாது எனவே, மருத்துவமனையிலேயே வேலைக்கு சேர்ந்தேன்.
ஆறுமாதம் இருவரும் காதலித்து வந்தோம். இந்த மருத்துவமனை தான் எங்கள் காதல் உலகம். கடந்த 28/10/2022 அன்று இருவரும் திருமணம் செய்துக்கொண்டோம்.
எங்களின் திருமணத்திற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர் தலைமையில், எங்கள் திருமணம் நடைபெற்றது. நிரந்தர வேலைக்கூட இல்லாதவர்களுக்கு எதுக்கு திருமணம் என்று பலரும் கேளி செய்தார்கள்.
அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள். தாலி எடுத்துக்கொடுத்த கையுடன். தினகூலியாக இருந்த எனக்கு நிரந்தர வேலை கொடுத்தார்.
உண்மையான காதல் ஒன்று போதும், நம் வாழ்க்கையை அழகாக மாற்றி விடும். என்று கூறிவிட்டு காதல் மனைவிக்கு “எனக்கென வந்த தேவைதையே சரி பாதி நீ அல்லவா” என பாட ஆரமித்தார்.