உலகின் முன்னணி நிறுவனமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு இந்நிலையில் ஐபோன்களில் புதிதாக வெளியான ஐபோன் அப்டேட் ஆனா iOS 16 ஐ பதிவேற்றினால் ஐபோனின் ஹாரிசாண்டல் க்ளிட்ச் வருவதாக புகார் எழுந்துள்ளது.
உலகின் மிக பெரிய நிறுவங்களின் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் அதனின் புதிய புதிய மாடேல் ஐபோனிகளை தவறாமல் வெளியிட்டு வருகின்றனர். எத்தனை போன்களை வைத்திருந்தாலும் புதிதாக வரும் ஐபோனி வாங்க ஐபோன் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதை லோன் மூலமாகவும் வாங்கிவிடுவார்கள். இந்நிலையில் ஐபோன்களுக்கு புதிதாக ஒரு அப்டேட் ஒன்றை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டை பதிவிறக்கம் செய்த பயனாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபோனில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோன் அப்டேட் ஆனா iOS 16 ஐ இன்ஸ்டால் செய்தவர்களின் ஆப்பிள் ஐபோன் டிஸ்பிளேவில் ஹாரிசாண்டல் க்ளிட்ச் இடம் பெற்றுள்ளது. இந்த கோளாறால் பல ஐபோன் பயனர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.சமூக ஊடக தளங்களில், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் சில பயனர்கள் தங்கள் சாதனங்களை ஐபோன் வேக் அப் செய்யும் போது ஹரிசாண்டல் கோடுகள் திரை முழுவதும் ஒளிருகிறது என்று புகார் அளித்துள்ளனர்.மேலும், 1.5 லட்சத்துக்கு வாங்கிய ஐபோனிகளில் ஏற்பட்டு வரும் இந்த கோளாறால் ஐபோன் ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.