கொரோனா பரவல் சீனாவில் மீண்டும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த நாட்டின் கொரோனா பரவல் குறித்தான தகவல்களை முறையாக வெளியிட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தோற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. தன்னால் உலக நாடுகள் கடுமையான முயற்சிக்கு பிறகு அந்த கொரோனா தொற்றின் தீவிரம் கட்டுக்குள் வந்தது. உலக நாடுகளில் இருக்கும் மக்கள் தடுப்பூசிகளையும் முறையான வழிமுறைகளையும் பின்பற்றியதால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் முற்றிலும் குறைந்தது. இதனால் கொரோனா ஊரடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வந்தனர். இந்நிலையில் சீனாவில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் உலக நாடுகள் மத்தியில் கொரோனா மீதான அச்சம் மீண்டும் தென்பட தொடகியுள்ளது.
சீனாவில் கொரோனா பரவலால் தினமும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும் பல்லாயிரக் கணக்கானோர் அதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக ஊடங்கங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதனை சீன அரசு மறுப்பு தெரிவித்து கொரோனா குறித்தான தகவல்களை பொதுவெளியில் வெளியிட மாட்டோம் என்றும் சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகவும் சீனா உரிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் பல நாடுகள் முறையிட்டு வரும் நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு கொரோனா பரவல் குறித்தும் கொரோனா பரவலை தடுக்க அந்த நாடு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வெளிப்படையாக பொதுவெளியில் பகிர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.