40 ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட ; சட்ட நாதர் கோவில் கோபுர வாசல்..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டை நாதர் சுவாமி கோவில் உள்ளது. 32 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற மே மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான திருப்பணிகளும் நிறைவடைந்துள்ளது.
சட்டை நாதருக்கு கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது, கலசத்திற்கு முன் ஒட்டகம், யானை, மற்றும் குதிரை ஆகியன ஊரவலமாக கொண்டு வரப்பட்டது. ஆனால் இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 4 வாசல்கள் இருக்கின்றது.
அதில் மேற்கு கோபுர வாசல் மட்டும் 40 ஆண்டுகளுக்கு முன் பூட்டி வைத்துள்ளனர். தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் 40 ஆண்டுகளுக்கு பின் கோபுர வாசல் திறக்கப்பட்டது.
மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது பக்தர்களுக்கு வசதியாக உள்ளதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பாபிஷேக யானை சாலை பணிக்காக, கடந்த மாதம் நந்தவனத்தில் பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் கிடைத்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.