56.95 கோடி செலவில் மீன் பண்ணை திறப்பு..!! இனி மீனவர்களுக்கு..!!
56.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 புதிய மீன் இறங்கு தளங்கள், 2 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 5 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளையும், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 4 கலைஞர்களுக்கு நிதியுதவிக்கான ஆணைகளையும் வழங்கினார்.
முன்னதாக, பசுமை புரட்சியின் தந்தை மறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியும், நாட்டின் ‘பசுமைப் புரட்சி’யின் முக்கிய சிற்பியுமான பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..