ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு..!! 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி..!!
நாளை ஆடி மாதம் தொடக்க இருப்பதால்.., அதுவும் ஆடி முதல் நாளே ஆடி அமாவாசை என்பதனால், இந்துக்கள் கோவிலுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.., அது மட்டுமின்றி பல அம்மன் கோவில்களில் பூஜைகள் செய்வது வழக்கம் ஆனால் அம்மன் கோவில்கள் மட்டுமின்றி ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரி மலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட உள்ளது.
சபரி மலை மட்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை, போன்ற காலங்களில் நீண்ட காலத்திற்கு திறக்கப்படும் மற்ற மாதங்களில் குறிப்பிட்ட ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்கள்..,
சபரி மலையில் இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன்.., சபரிமலை ஐயப்பன் கோவிலை திறந்து தீப ஆராதனை செய்ய உள்ளார். என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் 18ம் படி வழியே ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள் என கூறிய பின் பல்லாயிரம் கணக்காண பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சபரி மலை ஐயப்பன் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
நாளை காலை திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடைசாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 21ம் தேதி சாற்றப்படும் நடை மீண்டும் அடுத்த ஆவணி
மாதம் ஆகஸ்ட் 27ம் தேதி முடிகள் 31ம் தேதி வரை சபரி மலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்னர்.