சபரிமலை கோவில் திறப்பு..! குறிப்பிட்ட நாட்கள் வரை மட்டுமே.. பக்தர்களுக்கு அனுமதி..!
ஆனிமாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு காலங்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
இந்த சீசன் நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திர திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும். அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
இன்று முதல் வாரும் 19 ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…
வருகிற 19ஆம் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடை திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..