தமிழக காவல் துறை பிச்சைக்காரர்களை மீட்டு அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்து தரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 1800 பிச்சைகாரகளை மீட்டு அவர்களுக்கு புதிய வாழ்வு முறையை அளித்துள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறை சென்னையை அடுத்துள்ள தாம்பரம், காஞ்சிபுரம், சேலேம் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் பிச்சைக்காரர்களை மீட்டுள்ளனர் அதன்படி இதுவரை வரை 1800 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பிச்சைக்காரர்களில் 953 பிச்சைக்காரர்கள் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 255 பேர் அரசு இல்லங்களில் சேர்க்கப்பட்டும், 367 பேர் அவர்களின் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.18 வயதிற்கும் குறைந்த 27 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். மேலும் மீதமுள்ள 198 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.இதன் மெல்லாம் 1800 பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையின் இந்த சிறந்த ஆப்ரேசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல தரப்பினர் இந்த செயலை வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர்.