எதிர் கட்சியின் பொய் பிரச்சாரம்…!! அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த கனிமொழி..!!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே ஈஸ்வர சாமி அவர்களை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்… காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு கனிமொழி அவர்களுக்கு ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்..
தேர்தல் பரப்புரையின் போது எதிர்க்கட்சியினர் இப்பகுதியில் பி.ஏ.பி அணையிலிருந்து திண்டுக்கல் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக ஈஸ்வரசாமிக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரம் மட்டுமே செய்வார்கள். அதனை நம்ப வேண்டாம் எனவும். அப்பகுதிக்கு 600கோடி செலவில் காவிரியில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இட ஒதுக்கீட்டில் வருபவர்களை எல்லாம் கேவலப்படுத்தக்கூடிய ஒருவர்தான் அண்ணாமலை எனவும், அவர்கள் (அண்ணாமலை) வந்ததே தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கித் தந்த அந்த இட ஒதுக்கீட்டில் தான் எனவும், இந்தப் பொய்யையே வைத்து அரசியல் செய்து கொண்டு மக்களை அரசியல் மற்றும் ஜாதியின் பெயரால் பிரித்து பெண்களை அடிமைப்படுத்த நினைக்கக்கூடிய ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் தேர்தல் பரப்புரையில் பேசினார்..
தொடர்ந்து மடத்துக்குளம் பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..