‘ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும்’ ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் கோரிக்கை!

சபாநாயகரின் நோட்டீஸுக்கு விளக்கம் தர ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தரப்பில் கோரிக்கை.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் “இந்த விவகாரத்தில் தமிழக சபாநாயகர் விரைவில் உரிய நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாகவும், நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது” என்று கூறி வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு சபாநாயகர் தனபால் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் ஏன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள்? என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் தர ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

What do you think?

சுகாதாரத்துறை அமைச்சரையும் தாக்கிய கொரோனா வைரஸ்!

‘யாரும் எதிர்பார்க்காத கூட்டணி’ மிஷ்கினுடன் கைகோர்க்கும் வடிவேலு!