கடலூரில் மருத்துவக் கல்லூரி: தமிழக பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் அறிவிப்பு

தமிழக பட்ஜெட்டைத் இன்று தாக்கல் செய்துள்ள துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் சட்டப்பேரவையில் இன்று (வெள்ளி) பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இதில் “கடலூர் மருத்துவக் கல்லூரி குறித்த அறிவிப்பில் ஏற்கெனவே அறிவித்தபடி கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும், கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாக அது செயல்படுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் கடந்த ஜன-9 அன்று பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “திமுக ஆட்சியின்போது கடலூர் மாவட்டத்தில் 40 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி அமைக்க ஆணை வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

அப்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்த கேள்விக்கு பதிலளித்திருந்த சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கார், “கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3,600 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது, தற்போது கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை தொடங்க முதல் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது” என தெரிவித்திரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்

What do you think?

அயலான் அப்டேட் – முதல் முறையாக மூன்று வேடங்களில் S K?

‘கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறியிருக்கக்கூடாது’ – அமித்ஷா ஒப்புதல்!