ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., மோடியின் அடிமைகள் – உதயநிதி ஸ்டாலின் சாடல்

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மோடியின் அடிமைகளாக இருப்பதாக தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தல் வெறும் இன்டர்வெல், 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்தான் கிளைமேக்ஸ்” எனக் கூறினார். அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பார் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

What do you think?

மத்தியபிரதேசத்தில் இரண்டு ரயில்கள் மோதல்; 3 பேர் உயிரிழப்பு?

CAA-நடிகர் ரஜினியுடன் இஸ்லாமிய உலமாக்கள் சந்திப்பு