“எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, எம்மொழிகும் சளைத்ததல்ல எம் மொழி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகத் தாய்மொழி தினத்தை கொண்டாடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி என புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், அகத்திலும் புறத்திலும், அன்பும் வீரமும் கொண்டு வாழும் மொழி நற்றமிழர் தாய்மொழி என குறிப்பிட்டுள்ளார். மேலும், போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழியாக மட்டுமின்றி பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட ஒரே மொழி, செம்மொழி என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் உலகெங்கும் நம் உயர்தனிச் செம்மொழி பரவட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..