“நம்ம மெரினா நம்ம பெருமை” 411 பேருக்கு அரசு பணி நியமன ஆணை..! அசத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!
“நம்ம மெரினா நம்ம பெருமை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை அருகில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், மாநகராட்சியின் “நம்ம மெரினா நம்ம பெருமை” என்ற விழிப்புணர்வு இயக்கத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை அவற்றை அழகாகவும், தூய்மையாக காட்டவும்., ஒழுங்கற்ற முறையில் நடபவர்களை கண்காணிக்கவும் பொதுமக்களிடையே சுத்தம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சிக்கு உதவும் வகையில் நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய 4 சக்கர ரோந்து வாகனங்களை 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்., அந்த வாகனங்களை தாமே இயக்கி மெரினாவில் பார்வையிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து நீர்நிலைகளில் 3.5 மீட்டர் கீழ் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிப்பதற்காக மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் போன்ற அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் மணற்பரப்பை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
மாநகராட்சியின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் போதே காலமான பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு அவர்களது வேலையை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது., அதன்பேரில் 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை நடத்தினார்., அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்..
இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன், மாமன்ற ஆளுங்கட்சித் துணைத் தலைவர் காமராஜ், உட்பட மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..