இந்தியாவின் ஒலிம்பிக் சங்க தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெறவுள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியாவின் ஒலிம்பிக் சங்க தலைவராக இந்தியாவின் தங்க மங்கையானா பி.டி. உஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஒலிம்பிக் சங்க தலைவருக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவரின் ட்விட்டேர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் அதில் சக வீரர்கள் ஆதரவை ஏற்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று அவர் அறிவித்திருந்த நிலையில் வேட்மனு தாக்கல் செய்திருந்தார். நேற்றுடன் வேட்மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் டிசம்பர் 10 தேதி தேர்தல் நடக்க இருந்தது.
இந்நிலையில் இந்தியாவின் ஒலிம்பிக் சங்க தலைவருக்கான தேர்தலில் பி.டி. உஷாவை தவிர வேறு யாரும் போட்டியிட வேட்மனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்தார். அதனால் பி.டி. உஷா ஒலிம்பிக் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் என்று அறிவித்தனர்.
இதுகுறித்து மத்திய சட்ட மற்றும் நீதி துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி. உஷா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் கவுரவமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நமது நாட்டின் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.மேலும், அவர்களால் நாடு பெருமை அடைகிறது என்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷா இந்தியா ஒலிம்பிக்கின் முதல் பெண் தலைவராகிறார்