‘கொரோனாவால் டிரெண்டாகும் படையப்பா திரைப்படம்’ காரணம் இதுவா?

கொரோனா வைரஸ் எதிரொலியால் ரஜினியின் படையப்பா திரைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் நாளை பிரதமர் மோடி நாளை மக்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அனைவரும் சுய தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்ற கோஷங்களை எழுந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் படையப்பா திரைப்படம் டிரெண்டாகி வருகிறது. ஆம், அந்த படத்தில் வில்லியாக வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் 18 ஆண்டுகளாக ஒரே அறையில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்திருப்பார்.

இதனை குறிப்பிட்டு பல நெட்டிசன்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு, கே.எஸ்.ரவிகுமாரின் படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம்தான் சிறந்த உதாரணம் என்று மீம்ஸ்களில் கூறி இதனை தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.

What do you think?

இங்கிலாந்தில் முழு அடைப்பு – பிரதமர் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!