குழந்தை வரம் தரும் பத்மநாப பெருமாள்..! வழிபட வேண்டிய முறை..!
ஒரு வீட்டில் குழந்தை இருந்தால் அந்த வீடு செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.., ஆனால் அந்த குழந்தை வரம் இன்று வரை பலரும் தவம் இருக்கின்றனர்.., அப்படி நமது வீட்டில் செல்வம் செழிக்க வைக்கும் குழந்தை வேண்டி பலரும் இன்று வரை தவம் இருக்கின்றனர்.
குழந்தை வரம் கிடைக்கும் நாம் செய்ய வேண்டிய வழிபட பற்றி இதில் தெளிவாக படிக்கலாம்..
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, திருக்கண்டியூர் செல்லும் சாலையில் திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி ஆற்றின் தென்கரை அருகே அமைந்துள்ள ஸ்ரீமன் நாராயணன் இத் திருத்தலத்தில் அர்ச்ச ரூபமாய் சேவை செய்கிறார்.., செந்தலை என்னும் புகழ் பெற்ற திருத்தளத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபரிமளவல்லி தாயார் சமேத ஸ்ரீஅனந்த பத்மநாப பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இக்கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு.., ஸ்ரீஅனந்த பத்மநாப பெருமாளுக்கு தாகம் ஏற்பட்டபோது ஆதிசேஷன் பெருமாளின் மேற்கு புறத்தில் ஒரு துளையிட்டு தண்ணீர் வரவழைத்து தாகம் தீர்த்தார். இதனை மக்கள் தீர்த்த கிணறு என கிணறு எனவும் அழைக்க தொடங்கினார்கள்.
இத்திருத்தலத்தில் மட்டுமே பெருமாள் ஆதிசேஷன் உடல் மீது இல்லாமல் ஜபக் கோலத்தில் தவம் மேற்கொண்ட படி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அக்கிணற்றில் உள்ள தண்ணீர் கொண்டு நீராடி விட்டு செல்வது வழக்கம்..
அதேபோல குழந்தை வரம் வேண்டி தவம் இருப்பவர்கள் இக் கிணற்றில் நீராடி விட்டு கோவிலே சுற்றி கணவன் மனைவி இருவரும் வளம் வந்து வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்..,
மேலும் நாக தோஷம் இருப்பவர்களும் இதனை செய்யலாம் அவ்வாறு செய்தால் நாக தோஷம் நீங்கி விடும் என சொல்கின்றனர்.
இக்கோயிலில் ஆடிப் பூரம், நவராத்திரி, தனுர் மாத பூஜை, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீ ராமநவமி, அட்சய திருதியை போன்ற வைபவங்கள் வெகுவிமர்சையாக நடைபெறும் அன்றைய நாளில் வழிபட்டால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
ஆலயத் தொடர்புக்கு : 9443287288
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..